மிறைக்கவிகளுள் ஒன்று; ஒருவகை யாப்பமைதியுடன் அமைந்த பாட்டினைவேறுதொடையும் அடியும் கொண்ட பாட்டாகப் பிரித்தாலும் சொல்லும் பொருளும்வேறுபடா மல் அதுவும் ஓர் யாப்பமைதியுடைய செய்யுளாக அமை யும்படிசெய்வது.எ-டு : ‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டுவரியளி பாட மருவரு வல்லி இடையுடைத்தாய்த்திரிதரு காமர் மயிலியல் ஆயம் நண் ணாத்தேமொழிஅரிவைதன் நேரென லாம்இயற் றையயாம் ஆடிடனே’இப்பாட்டுக் கட்டளைக் கலித்துறை யாப்பு. தலைவன் தலைவியது ஆடிடம்கண்டு நெஞ்சுடன் கூறியது இது.“தலைவியிடத்தே ஆசையால் இங்கு வந்த நாம் விரும்பத்தக்க தாய்,வண்டுகள் பாட, இடை போன்ற கொடிகள் ஆடி அசைய, அழகாக இருக்கும் இந்தஇடம், தன் ஆயத்துடன் இங்கே இன்று வாராத நம்தலைவியைப் போலவே தோன்றுகிறது” என்று தலைவன் நெஞ்சொடு கிளக்கும் இப்பாடலை ஆறடிகள் கொண்டநேரிசை யாசிரியப்பாவாகப் பிரிப்பி னும், தொடையழகும் பொருளும்கெடாமலேயே அமையும். பிறிதாக வரும் அப்பாடல் வருமாறு :‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும்பரிசு கொண்டு வரியளி பாடமருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதரும்காமர் மயிலியல் ஆயம் நண்ணாத்தேமொழி அரிவைதன் நேரெனல்ஆமியற்(று) ஐய யாம்ஆ(டு) இடனே.’ (தண்டி. 98 உரை)