ஒவ்வொரு தானத்துப் பிறக்கின்ற எழுத்துக்கள் கூட்டிக் கூறப்பட்டனவாயினும், நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடுகள்சிறியன சிறியனவாக உள. அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் – என்றவகையானும், தலையிசை மிடற்றிசை நெஞ்சிசை மூக்கிசை – என்ற வகை யானும்பிறவகையானும் வேறுபடுதல். ‘ஐ’ விலங்கலோசை உடையது. (இ. வி. எழுத். 14உரை.)