உந்தியிலிருந்து பிறக்கும் காற்று, தலை – மிடறு – நெஞ்சு-இவற்றில்நிலைபெற்றுப் பல் – இதழ் – நா – மூக்கு – மேல்வாய் – என்ற ஐந்தன்முயற்சிப் பிறப்பான் வெவ்வேறு எழுத்தொலி யாய்த் தோன்றும்.பன்னீருயிரும் மிடற்றுவளியான் இசைக்கும். அ ஆ – அங்காப்பானும், இ ஈஎ ஏ ஐ – அங்காப்போடு அண்பல் முதலை நாவிளிம்பு உறுதலானும், உ ஊ ஒ ஓ ஒள- இதழ் குவித்துக் கூறுதலானும் பிறக்கும். (அங்காத்தலை எல்லாவற்றுக்கும் கொள்க.)க் ங், ச்ஞ், ட்ண் – முறையே முதல்நா அண்ணம், இடைநா அண்ணம், நுனிநாஅண்ணம் உறப் பிறக்கும். த் ந் – அண்பல் அடியை நுனிநாப் பரந்துஒற்றலானும், ற் ன் – நுனிநா அண்ணம் ஒற்றலானும், ர் ழ் – நுனிநா அண்ணம்வருடலா னும், ல் – நாவிளிம்பு வீங்கி அண்ணத்தை ஒற்றலானும், ள் -நாவிளிம்பு அண்ணத்தை வருடலானும், ப் ம் – இரண்டு இதழ்களும்இயைதலானும், வ் – மேற்பல்லைக் கீழிதழ் இயை தலானும், ய் – அடிநா அண்ணம்கண்ணுற்று அடைதலானும், மெல்லெழுத்து ஆறும் தம் பிறப்பிடம் முயற்சிஇவற்றொடு மூக்கொலி பொருந்தலானும் பிறக்கும். இவற்றின் ஒலி களிடையேசிறு வேறுபாடுகள் உள.சார்பெழுத்துக்கள் தத்தம் அடிப்படை எழுத்துக்களின் பிறப்பிடமும்முயற்சியும் தமக்கும் உரிமையவாகப் பிறக்கும். ஆய்தம் தனக்குப்பொருந்திய நெஞ்சுவளியால் பிறக்கும் என்பர் நச்.உந்தியில் தோன்றும் எழுத்து மிடற்றை அடையும் வரை நிகழும் திரிதருகூறுகள் ஆகிய பரை, பைசந்தி, மத்யமா என்பன இலக்கண நூல்களுக்கு ஏலா.வெளிப்படும் ஒலியான வைகரி என்பதே இலக்கண நூல்களான் உணர்த் தப்படும்.இன்ன செய்திகள் தொல்காப்பிய எழுத்துப்படல மூன்றாம் இயலாகியபிறப்பியலில் 20 நூற்பாக்களான் விளக்கப் பட்டுள. (தொ. எ. 83 – 102நச்.)