பிரிந்தெதிர் செய்யுள்

முதலில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் ஈற்றெழுத்துத் தொடங்கி மடக்கிஎழுதப்பட்டால் பிறிதொரு செய்யுளாக அமையு மாறு பாடப்படும் சித்திரகவி.எ-டு : ‘நீர நாகமா, தார மாகமே,வார மாகமா, ணார ணாககா’.நீரநாக – நற்குணத்தவனே! நீரிலுள்ள பாம்பில் துயில்பவனே!மா தாரமாக – திருமகள் தேவியாக;மேவு ஆரம் ஆக – பொருந்திய மாலையை அணிந்த மார்பனே!மாண் ஆரண ஆக – மேம்பட்ட வேதவடிவினனே!கா – என்னைப் பாதுகாப்பாயாக.எதிரேறு வருமாறு:‘காக ணாரணா, மாக மாரவா,மேக மாரதா, மாக நார நீ’மாகமார் அவாம் – மேலுலகத்துள்ளார் விரும்பும்;நார – நற்குணத்தையுடையவனே!மேக மாக – மேக வடிவனே!மா ரதா – பெருவீரனே!நாரணா – நாராயணன் என்னும் திருநாமத்தோனே!நீ கண் – நீயே பற்றுக்கோடாவாய்;கா – காப்பாயாக. (பொருள் கொண்டுகூட்டியுரைக்கப் பட்டது) (மா. அ.பாடல் 796)