பிரகிருதி

இது தமிழில் முதனிலை எனவும், பகுதி எனவும் கூறப்படும். இதுபகுபதத்தினது முதல் பிரிவாய் நிற்றலின் முதனிலை (முதல் நிலை)எனப்பட்டது. பகாப்பதத்தின் சொல் முழுதும் பகுதியாம். இப்பகுதி,இடைநிலை விகுதி முதலிய ஏனை உறுப்புக்களொடு சேருமிடத்துவிகாரப்படுதலுமுண்டு. இரு, இடு முதலிய விகுதிகள் தன்னொடு சேரும்போதுஅவற்றைத் தன்னுள் அடக்கிய பகுதியாதலுமுண்டு. பகுதி இல்லாத சொல்லேஇல்லை எனலாம்.எ-டு : உண்டான் – உண் : பகுதியானை – இப்பகாப்பதம் முழுதும் பகுதி.வந்தான் – வா என்ற பகுதி குறுகி வ என நின்றது.எழுந்திருந்தான் – எழுந்திரு : பகுதிநட (ஏவலொருமை) – நட : பகுதி; ‘ஆய்’ விகுதி குன்றி வந்தது. (சூ.வி. பக். 41)