முதலடியும் ஈற்றடியும் எழுத்து மிக்கு, நடு இரண்டடியும் எழுத்துக்குறைந்து நாலடியும் சீரொத்து வரும் செய்யுள்.எ-டு : ‘பரவு பொழுதெல்லாம் பன்மணிப்பூட் டோவாவரவும் இனிக்காணும் வண்ணநாம் பெற்றேம்விரவு மலர்ப்பிண்டி விண்ணோர் பெருமான்இரவும் பகலும்வந் தென்தலைமே லானே’இதன்கண் முதலடியும் ஈற்றடியும் 13 எழுத்துப் பெற்றுவர, நடுஇரண்டடியும் 12 எழுத்துப் பெற்று வந்தவாறு. இஃது எறும்பின் உடலின்இடைப்பகுதிபோல இடையடிகள் இரண்டும் எழுத்துக் குறைந்துசுருங்கிவருவதால், தமிழில் ‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என்று இதனைமொழி பெயர்த்துக் கூறுவர். (யா. வி. பக். 515)