பின் என்ற சொல் புணருமாறு

பின் என்ற சொல் பின்னுதல் தொழிலையும், கூந்தலை வாரிப் பின்னியபின்னலையும் உணர்த்தும். இஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும்வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வந்துழி உகரமும், உயிர் வந்துழி ஒற்றிரட்டுதலும் பெற்றுப்புணரும்.எடு : பின்னுக்கடிது; பின்னு நன்று, பின்னு வலிது, பின் யாது,பின் னரிது; பின்னுக்கடுமை; பின்னுநன்மை, பின்னுவலிமை, பின்யாப்பு,பின்னருமை. (தொ. எ. 345 நச்.)பின் என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களுள்ஒன்று. இது பெயராகவும் வினை யெச்சமாகவும் நிற்கும். இடைச்சொல்லும்வினையெச்சமும் இயல்பாக முடியும்.எ-டு : என்பின் சென்றான், உண்டபின் சென்றான்பின் என்ற பெயர் வன்கணம் வருமொழியாக வந்துழி, பிற் கொண்டான் – எனனகரம் றகரமாகத் திரிந்தும், பின்கொண் டான் – என இயல்பாகவும் புணரும்.(தொ. எ. 333 நச்.)