பிடவு என்பது ஒருவகை மரம். அம் மரத்தால் பிடவூர் என்ற பெயர் ஊர்ப்பெயராக அமைந்திருக்கலாம். ‘சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியபாடல்’ என்ற தொடர் இவ்வூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்ற வள்ளல் என்று தெரிகிறது. பிடவூர் சோழ நாட்டு ஊர்களுள் ஒன்று எனத் தெரிகிறது.
“செல்லா நல் இசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும” (புறம். 395:19 21)