கோப்பெருஞ் சோழனின் ஆருயிர் நண்பராகிய ஆந்தையார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரினர். “தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் பிசிரோன்” என்ற கோப்பெருஞ் சோழனின் கூற்று ‘பிசர்’ என்னும் ஊர் பாண்டி நாட்டது என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது இவ்வூர் இராமநாதபுரம் மாவட்டதில்க் பிசிர்க் குடி என்று வழங்கப்பெறுவதாகத் தெரிகிறது.” பிசிர் என்ற சொல்லுக்கு நீர்த்துளி அல்லது ஊற்றுநீர் என்று பொருள் இருப்பதால் நல்ல ஊற்றுநீர் கடைக்கும் ஊராய் இருந்து, நீர்நிலையான் இவ்வூர் “பிசிர்” எனப் பெயர் பெற்றதா என்ற கருத்து மேலும் ஆய்வினாலும் உறுதியாக வேண்டும். நற்றிணையில் 61 ஆம் பாடலும், அகநானூற்றில் 308 ஆம் பாடலும், புறநானூற்றில் 67, 184, 191, 212 ஆகிய பாடல்களும். இவ்வூரைச் சார்ந்த புலவர் பிசிராந்தையார் பாடியவை. “பெருங்கோக் கள்ளி கேட்க, ‘இரும்பிசிர்
ஆந்தை அடியுறை’ எனினே, மாரண்டநின்
இன்புறு பேடை அணிய, தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே” (புறம். 67: 11 14)
“ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர் ஒம்பு நனே” (புறம். 215;4 7)