பாவில் புணர்ப்பு

ஒரு செய்யுள் நான்கு அடி யுடையதாக நால்வர் நான்கடி களுக்கும்ஈற்றுச் சீர்களைச் சொல்ல ஒருவன் ஏனைய சீர்களைப் பாடிச் செய்யுளைநிரப்பிக் கொடுப்பது என்ற சித்திரகவி வகை. (வீ. சோ. 181 உரை)நால்வர் முறையே பதியே, நதியே, யதியே, விதியே என்ற ஈற்றுச்சீர்களைக் கூற, ஒருவன்,‘பதிகளிற் சிறந்தது அரங்கப் பதியேநதிகளிற் சிறந்தது பொன்னிநன் னதியேயதிகளில் மிக்கோன் பூதூர் யதியேவிதிகளில் தக்கது வாய்மைசொல் விதியே’என்றாற்போலப் பாடி முடிப்பதாம்.பாவின் புணர்ப்பாவது நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால் அவையேஅடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது.எ-டு : மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கை பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன் கண்டகம் புக்க செங்கண் மறவன் யாழின் இன்னிசை மூழ்கவீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே.’தடித்த எழுத்தின, நால்வர் நான்கு பாவில் உரைத்த கட்டுரை யின்தொடக்கச் சொற்கள். அவை முறையே முதல் நான்கடி களிலும் முதற்சீராக அமைய,இந்நேரிசை ஆசிரியப்பாப் பொருள் முற்ற இயற்றப்பட்டமையின் ‘பாவின்புணர்ப்பு’ ஆகும். (யா. வி. பக். 541)