பாழி

நன்னனின்‌ ஏழில்மலையைச்‌ சார்ந்த கொற்றிக்‌ கடவு என்ற அடர்ந்த காட்டின்‌ இடையே அம்மரக்கல்‌ “Ammarakkal“ என்ற ஒரு பெரும்‌ பாறை உள்ளது. அங்குள்ள மக்களால்‌ அப்‌பாறைப்‌ பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறை வழிபடப்‌ பெறுகிறது. இப்‌பாறையைச்‌ சுற்றியுள்ள பகுதியே பாழியாக இருக்க வேண்டும்‌ என்றும்‌, அது நன்னனுக்குரியதாய்‌ இருந்தது என்றும்‌ கூறப்படுகிறது. பாழி நகரம்‌ ஏழிற்குன்றத்தைச்‌ சார்ந்ததாகவே இருந்திருக்க வேண்டும்‌. பாழி நாட்டு மக்கள்‌ சிறுகுளத்தைப்‌ பாழி என்பார்‌, இவ்வூரிலுள்ள குளம்‌ மன்னனின்‌ பொன்‌ சேமித்து வைக்கப்‌ பெற்‌றிருந்த சிறப்பினையுடையதாய்‌ இருந்திருக்கிறது. அச்சிறப்‌ பாலேயே நீர்‌ நிலையின்‌ பெயரால்‌ இவ்வூர்‌ “பாழி” எனப்‌ பெயர்‌ பெற்று இருக்கவேண்டும்‌. வேளிர்களால்‌ அளிக்கப்பெற்ற பொற்‌காசுகளை இவ்வூர்ப்‌ பாழியில்‌ (குளத்தில்‌) இட்டு வைத்து, காவற்படையை நிலையாக நிறுத்திக்‌ காத்தான்‌ நன்னன்‌ எனத்‌ தெரிகிறது. பாழி நகரமே நிலையான காவற்படையினை உடையதாக இருந்திருக்கறது. பாழிகாவல்‌ மிக்கிருந்தது என்னும்‌ கூற்று நன்னன்‌ மிகுதியாகப்‌ பொன்‌ படைத்திருந்தான்‌ என்பதை உணர்த்துவதாகக்‌ கொள்ளலாம்‌. இளம்‌ பெருஞ்சென்னி என்ற சோழன்‌ நன்னனின்‌ பாழியை அழித்ததாகவும்‌ தெரிகிறது,
“சூழியானைச்‌ சடர்ப்பூண்‌ நன்னன்‌
பாழியன்ன கடியுடை வியன்னகர்‌” (அகம்‌.15,10 11)
“முறையின்‌ வழாஅ து ஆற்றிப்‌ பெற்ற
கறையடி யானை நன்னன்‌ பாழி (௸. 142:8 9)
“பாரத்துத்‌ தலைவன்‌, ஆர நன்னன்‌,
ஏழில்‌ நெடுவரைப்‌ பாழிச்‌ சிலம்பில்‌
களிமயிற்‌ கலாவத்தன்ன” (ஷே. 152,12 14)
“வெளியன்‌ வேண்மான்‌ ஆஅய்‌ எயினன்‌,..
அளி இயல்‌ வாழ்க்கைப்‌ பாழிப்‌ பறந்தலை
இழை அணி யானை இயல்‌ தேர்‌ மிஞிலியொடு
நண்பகல்‌ உற்ற செருவில்‌ புண்‌ கூர்ந்து
ஒன்‌ வாள்‌ மயங்கு அமர்‌ வீழ்ந்தென” (௸. 208;5 9)
“நன்னன்‌ உதியன்‌ அருங்கடிப்‌ பாழி
தொல்‌ முதிர்‌ வேளிர்‌ ஓம்பினர்‌ வைத்த
பொன்னினும்‌ அருமை நற்கு அறிந்தும்‌, அன்னோள்‌
துன்னலம்‌ மாதோ எனினும்‌ அஃது ஓல்லாய்‌ (௸..258: 1 4)
“அண ங்குடை வரைப்பின்‌, பாழி ஆங்கண்‌
வேள்முதுமாக்கள்‌ வியன்‌ நகர்க்‌ கரந்த
அருங்கல வெறுக்கையின்‌ அரியோன்‌ பண்பு நினைந்து,
வருந்தினம்‌ மாதோ எனினும்‌, அஃது ஓல்லாய்‌” (அகம்‌. 372: 3 6)
“எழூஉத்‌ திணிதோள்‌, சோழர்‌ பெருமகன்‌
விளங்குபுகழ்‌ நிறுத்த இளம்பெருஞ்சென்னி,
குடிக்கடன்‌ ஆகலின்‌, குறைவினை முடிமார்‌
செம்பு உறழ்புரிசைப்‌ பாழி நூறி” (௸. 375;10 13)
“தொடுத்தேன்‌, மகிழ்ந : செல்லல்‌ கொடித்தேர்ப்‌
பொலம்பூண்‌ நன்னன்‌ புனனாடு கடிந்தென,
யாழ்‌ இசை மறுகின்‌ பாழி ஆங்கண்‌,
‘அஞ்சல்‌’ என்ற ஆ அய் எயினன்‌
இகல்‌ அடுகற்பின்‌ மிஞிலி யொடு தாக்கி,
தன்‌உயிர்‌ கொடுத்தனன்‌, சொல்லியது அமையது” (௸. 396;1 6)