திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஊர் திருப்பாற்றுறை என்று வழங்கப்படுகிறது. சுாவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு இடையில் இக்கோயில் உள்ளது என்ற குறிப்பு, இவ்விடத்திற்குரிய துறை, பெயருக்கு விளக்கம் தருகிறது. இருப்பினும் பால் என்பதற்கு மார்க்கண்டேயர் இறைவனுக்கு அபி ஷேகம் செய்வதற்குப் பால் பெருகுமாறு இறைவன் அருள் புரிந்த தலம் என்ற கதையைச் சொல்கின்றனர் மக்கள் ஞானசம்பந்தர் இதனை. பாரார் நாளும் பரவிய பாற்றுறை என்று சொல்லும்போது இது மக்கள் விரும்பி வழிபட்ட தலம் எனத் தெரிகிறது. எனவே இதுவும் பாலைத்துறை போன்று, பரவியத்துறை பரத்துறை ஆகி பாற்றுறை ஆயிற்றா ? இல்லை. பரன் துறை (சிவன் கோயில் கொண்ட இடம்) பரத்துறை ஆகி பாற்றுறை ஆயிற்றா ? என்ற எண்ணங்கள் இங்கு அமைகின்றன. சம்பந்தர்,
பாவந்தீர் புனல் மல்கிய பாற்றுறை (56-4)
என்றும்
பானலம் மலர் விம்மிய பாற்றுறை (56-9)
என்றும்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை (56-10)
என்றும் இதனைப் பலவாறு போற்றுகின்றார்.