பாரம்‌

பாரம்‌ என்னும்‌ ஊர்‌ கொண் கானத்து நன்னனுக்கு உரிய தாய்‌ இருந்திருக்கிறது; அவன்‌ தலைநகர்‌ என்றும்‌ கருதப்படுகிறது. கொண்கானம்‌, ஏழிற்குன்றம்‌, பூழிநாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாய்‌ இருந்திருக்கிறது நன்னனின்‌ நாடு. இன்றைய. கண்ணனூருக்கு வடக்கே சுமார்‌ 15மைல்‌ தொலைவில்‌ இன்றும்‌ அதே பாரம்‌ என்ற பெயருடன்‌ இருப்பதாகக்‌ கூறப்படுகிறது. “மிஞிலி” என்ற மன்னனால்‌ காக்கப்பட்ட ஊர்‌ என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது”
“வீளை அம்பின்‌ வில்லோர்‌ பெருமகன்‌
பூந்தோள்‌ யாப்பின்‌ மிஞிலி காக்கும்‌
பாரத்து அன்ன ஆரமார்பின்‌
சிறு கோற்‌ சென்னி…” (நற்‌. 265 : 3 6)
“உறுபகை தரூஉம்‌ மொய்ம்மூசு பிண்டன்‌
முனைமுரண்‌ உடையக்‌ கடந்த வென்வேல்‌,
இசைநல்‌ ஈகைக்‌ களிறுவீசு வண்மகிழ்‌
பாரத்துத்‌ தலைவன்‌ ஆரநன்னன்‌”’ (அகம்‌. 152. 9 12)