திருப்பாம்புரம் எனச் சுட்டப்படும் இவ்வூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. நாகராஜன் வழிபட்ட தலம். ஆகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பாம்பு புரம் பாம்புரம் ஆயிற்று எனல் பொருத்தமாக அமையும்.
மஞ்சு தோய் சோலை மாமயிலாட மாடமாளிகைத் தன்மேலேறிப்
பஞ்சு சேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே – 41-4
மடக் கொடியவர்கள் வருபுனலாட வந்திழியரிசிலின் கரைமேல்
படைப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னகராரே – 41-8
என்ற பாடல்கள் அரிசிலாற்றின் கரையில் பாம்புர நகர் செழிப் புற்றிருந்த நிலையைக் காட்டுகின்றன.