சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானலிளஞ்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடை யார் பாடியது (புறம். 203) என்ற தொடர் பாமுளூர் என்ற ஓர் ஊர்ப் பெயரை அளிக்கிறது. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி இதை எறிந்தான் எனத் தெரிகிறது. இவ்வூர் சேரமானுடன் தொடர்புடையதாகத் தெரிவதால் இவ்வூர் சேரநாட்டைச் சேர்ந்ததாகக் கருத இடமளிக்கிறது.