பாதை pātai, பெ.(n.),
செடி(C.G);; bush.
தெ. பொத. க. பொதெ.
[பொது→ பொதை]
பாதை1 pātai, பெ. (n.)
1. வழி (பிங்.);; way, read.
2. ஒற்றையடிவழி (வின்.);; beaten track, foot-path.
3. முறை; method, manner. way, mode.
‘அவன் ஒழுங்கான பாதையில் போகவில்லை’ (வின்.);
4. மிதவை (சூடா.);; flat. bottomed boat.
“பாதைகள் சொரிவன பருமணி கனகம்” (கம்பரா. நாட்டு.31.);
பாதை2 pātai, பெ. (n.)
துன்பம்; affliction. trouble.