திருப்பாதிரிப் புலியூர் என்ற தலம் இன்று திருப்பாப் புலியூர் எனச் சுட்டப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்றும் வழங்கப்படுகிறது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம். கெடில நதிக் கரையிலே அமைந்துள்ள தலம் பாதிரிவனம் இது என்பதும், இறைவன் பாதிரி மரத்தினடி யில் தோன்றி. தவம் புரிந்த உமாதேவிக்கு வரம் கொடுத்தார் என்பதும், புலிக்கால் முனிவர் இங்கு இறைவனைப் பூசித்ததால் புலியூர் என்பதும் தோன்றி இரண்டன் சேர்க்கையால் பாதிரிப் புலியூர் என்னும் திருப்பெயர் இத்தலத்துக்கு அமைந்து விளங்கு என்பர் ஆயின் பாதிரி காரணம் என்பது தெளிவு – இன்றும் இத்தலத்திற்குரிய தலமரமாக பாதிரியே விளங்குகிறது.