பாதிச் சமப்பையுட் சந்தம்

அளவழிச் சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்துமுதலடியெழுத்தும் மூன்றாமடி எழுத்தும் எண்ணிக்கை வேறாய் இரண்டாமடிநான்காமடி எழுத்து எண்ணிக்கை ஒத்து வருவது.எ-டு : ‘செஞ்சுடர்க் கடவுள் திண்டேர் இவுளிகால் திவளஊன்றும்மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயில் மாடத்தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம்வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.’ (சூளா.38)இதன்கண் முதலடி எழுத்து 17; மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடிநான்காமடி எழுத்து 15 என அமைந்துள்ள வாறு. (யா. வி. பக் 518)