எழுத்துமடக்கு, அசை மடக்கு, சீர் மடக்கு, அடிமடக்கு என்ற மடக்குவகைகளில் சிறப்பான மடக்கு அடிமடக்கு எனப்படும். இம்மடக்கு இரண்டடிமடக்குதலும், மூன்றடி மடக்குதலும் நான்கடி மடக்குதலும் எனமூவகைப்படும்.முதல் ஈரடி மடக்குதல், முதலடியும் மூன்றாமடியும் மடக்கு தல்,முதலடியும் ஈற்றடியும் மடக்குதல், கடையிரண்டையும் மடக்குதல்,இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்குதல், இடையீரடி மடக்குதல் என ஈரடிமடக்கு ஆறும்; ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல், இரண்டாமடிஒழித்து ஏனைய மூன்றடியும் மடக்குதல், மூன்றாமடி ஒழித்து ஏனை மூன்றடிமடக்குதல், முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல் – என மூவடிமடக்கு நான்கும்;நான்கடியும் மடக்குதலாகிய மடக்கு ஒன்றும்; ஒரு சொல்லானே நான்கடிமுழுதும் மடக்கும் சொல்மடக்கு ஒன்றும்; இரண்டடியாக மடக்கும் பாதமடக்கு1, 2 – 3, 4; 1, 3 – 2, 4; 1,4 – 2, 3 என மடக்கும் மூன்றும்; பாடகமடக்கு ஒன்றும்;எனப் பாதமடக்கு 6+4+1+1+3+1 = 16 ஆகும். (தண்டி. 96 உரை)