பாண்டிக்கொடுமுடி

இன்று பெரியார் மாவட்டத்தில் கொடுமுடி என்று அழைக்கப்படும் ஊர் இது. தேவார மூவர்களும் இத்தலத்து இறைச் சிறப்பைப் புகழகின்றனர். காவிரியாற்றின் கரையில் உள்ள தலம். இதன் பழம் பெயர் கறைசை, கறையூர். கொடுமுடி என்பது சங்ககாலத்தில் வாழ்ந்த மன்னன் பெயர் எனவும். அவன் ஆண்ட இடமே கொடுமுடி என்பதும், திருப்பாண்டிக் கொடுமுடி நூல்கூறும் செய்திகளாகும் (பக். 4, 6). அப்பர். சுந்தரர், சம்பந்தர் மூவரும் இத்தலத்து இறையைப் புகழ்சின்றனர். இதனைச் சம்பந்தர்,
ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக்கென்று உழல் வாரும்
தேனமரும் மொழிமாது சேர் திரு மேனியினாரும்
கானமர் மஞ்ஞைகளாலும் காவிரிக் கோலக் கரைமேல்
பாலை நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடியாரே (205-7)
என்று பாடுகின்றார். எனவே காவிரிக் கரை இதன் இருப்பிடம் என்பது உறுதிப்படுகிறது.