பாணினியால் இயற்றப்பட்ட இலக்கணத்தின் பெயர் பாணி னீயம். பாணினிபாரத நாட்டின் வடமேற்குக் கோடிப் பகுதி யில் வாழ்ந்தவர். இவரது காலம்கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. ஏறத்தாழ 4000 சூத்திரங்களைக்கொண்ட வடமொழி இலக்கணநூலைப் பாணினி இயற்றினார். இவர் தமக்கு முன்வாழ்ந்த இலக்கணம் வல்லார் அறுபத்து நால்வர் இந்நூலுள்குறிக்கப்பட்டுள்ளனர். தம் காலத்துக்கு முற்பட்ட நூல்கள் ஆகியதாதுபதம், கணபதம் என்ற இரண்டனையும் பாணினி குறித்துள்ளார். தாதுமஞ்சரி, பதமஞ்சரி எனப் பிற் காலத்தெழுந்தவை அவற்றை அடியொற்றியனவே.பாணி னியே உத்திவகைளை முதன் முதலாகக் கையாண்டவர். அவ்வுத்தி வகைகள்‘பாஷேந்து சேகரம்’ என்ற நூலாகச் 18ஆம் நூற்றாண்டில்அமைக்கப்பட்டுள.பாணினியால் மிகுதியும் குறிப்பிடப்பட்டவர் சாகடாயநர், கார்க்கியர்,சாகல்யர் முதலானோர். பெயர்ச்சொற்கள் யாவும் வினைப்பகுதியாகியதாதுக்களிலிருந்து தோன்றிய னவே என்ற சாகடாயநர் கொள்கையைப் பாணினி தம்நூலில் முழுதும் அடியொற்றியுள்ளார்.பாணினீயம் தோன்றிய பின்னர் ஏனைய இலக்கணங்கள் மறைந்துவிட்டசெய்தியொன்றே இதன் பெருஞ்சிறப்பினைக் காட்டும்.கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாணினீயத்தில் 1245 சூத்திரங்களுக்குக் காத்தியாயனர் என்ற வரருசி வார்த்திகம் (-காண் டிகை) ஒன்றுவரைந்தார். அடுத்துக் குணிவிருத்தி முதலிய உரைகள் தோன்றின. கி.மு.முதல் நூற்றாண்டில் பதஞ்சலி யால் வரையப் பட்ட மாபாடியம் என்ற பேருரைஇப்போது 1713 சூத்திரங்களுக்கே கிடைத்துள்ளது.பாணினீயம் முழுமைக்கும் கி.பி. 650-ஐ ஒட்டிய காலத்தில் காசி நகரில்வாழ்ந்த ஜயாதித்யர், வாமநர் என்ற பெருமக்க ளால் காசிகாவிருத்தி என்றவிளக்கவுரை இயற்றப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டில் பர்த்ருஹரி என்பவரால்மாபாடிய விளக்கமான வாக்கியபதீயம் என்ற நூலும், 13ஆம் நூற்றாண் டில்கையடர் என்பவரால் கையடம் என்ற நூலும் இயற்றப் பட்டன. 15ஆம்நூற்றாண்டில் இராமபத்திரர் என்பவரால் பிரகிரியா கௌமுதி என்ற நூல்இயற்றப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் பட்டோஜீ என்பவரால் சித்தாந்தகௌமுதி இயற்றப்பட்டது; அஃது இன்னும் எளிமையாக்கப்பட்டு 19ஆம்நூற்றாண்டில் வரதாசர் என்பவரால் லகு கௌமுதி என்று சுருக்கிவரையப்பட்டது. (பி. வி. பக் 434-436)