பாடி

ஊர்களைக் குறிப்பிட வழங்கிவரும் தொன்மையான வடிவங்களுள் ஒன்று “பாடி” என்பதாகும். இது சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்கள், முல்லை நிலத்து ஊர்கள் “பாடி” எனப்பட்டன.[19] என்கின்றனர். இவ்வரன்முறை பெரும்பாலும் தொடர்ந்து இருந்திருக்கிறது. “பாடி” என்ற பொதுக் கூறு பெற்று முடியும் ஊர்கள் இன்றும் காடு சார்ந்த பகுதிகளிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக சில பாடிகள்; விளங்கம்பாடி. சிறுவாடி