பாடகம் என்பது வளைவாக மடங்கியிருக்கும் ஒரு வகைக் காலணி. இக்காலணியை மடக்குவது போல இரண்டிரண்டு அடிகள் ஒரே அளவினை உடையனவாய்மடங்குவது பாடக மடக்காம்.எ-டு : ‘ஓத நின்றுல வாவரும் வேலைவாய்மாத ரங்க மலைக்கு நிகரவேஓத நின்றுல வாவரும் வேலைவாய்மாத ரங்க மலைக்கு நிகரவே.’ஓத நின்று உலவா அரு வேலைவாய் மாதர் அங்கம் அலைக்கும் நிகரவே, ஓதம்நின்று உலவாவரும் வேலைவாய் மாதரங்கம் மலைக்கு நிகரவே-நின்று சொல்லமுடியாத அரிய காலத்தின்கண் இப்பெண்ணுடைய உறுப்புக்களைத்துன்புறுத்துமாறு (அக்கால நிகழ்ச்சிகள்) பொருந்தின; வெள்ளம்நிலைபெற்று உலவி வருகின்ற கடலில் பெரிய திரைகள் மலைக்கு ஒப்பாகஇருக்கும்.முதல் ஈரடியும் மீண்டு பின் ஈரடிகளாக மடக்குதலின், பாடகமடக்காயிற்று, இப்பாடல். (தண்டி. 96)