திருவாசி எனச் சுட்டப்படும் ஊர் இது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமமாதலின் பாச்சில் ஆச்சிராமம் என்று வழங்கப்படுகிறது என்ற கருத்து அமைகிறது. ஆச்சிராமம் முனிவர்களின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. சம்பந்தர், சுந்தரர் பாடிய கோயில் இங்கு உள்ளது.
அன்னமாம் பொய்கை சூழ் தரு பாச்சி
லாச்சிராமத் துறை — சுந் – 14-2
பொன் விளை கழனிப்
புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத்து —-4
மஞ்சடை மாளிகைசூழ் தருபாச்சிலாச் சிராமத்துறைகின்ற வன் (44-3) என்கின்றார் சம்பந்தர்.