பாசூர்

திருப்பாச்சூர் எனச் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் இது. சம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற இவ்வூர், சிவபெருமான் மூங்கில் அடியில் தோன்றியமையின் இப்பெயர் பெற்றது என்கின்றனர். (பாசு – முங்கில்) ஆயின் சம்பந்தர்,
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூர் – 196-1
பைவாய் நாகம் கோடலீனும் பாசூர் – 196-3
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூர் – 196-4
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூர் -196-5
என இதன் இயற்கை வளத்தையும், செழுமையையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லிச் செல்லும் நிலையில், பசுமையான ஊர் என்ற எண்ணத்திலேயே இவ்வூர் பாசூர் எனச் சுட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது பொருத்தமாக அமைகிறது.