பாக்கம் என்னும் ஊர்ப்பெயர்ச்சொல் பட்டினப்பாக்கத்தையே குறிக்கிறது. பொதுவாகக் கடற்கரை ஊர் என்ற பொருளிலும் பாக்கம் என்ற சொல் வழங்கப் பெற்றிருக்கிறது. கடற்கரை ஊர் என்ற பொருளில்,
“விலங்குபகையல்லது கலங்குபகையறியாக்
கொழும்பல் குடிச் செழும் பாக்கத்துக்
குறும் பல்லூர் நெடுஞ்சோணாட்டு” (பத்துப். பட்டிளப் 26..28)
பட்டினப்பாக்கம் என்ற பொருளில்
“தொகுபோர்ச் சோழன் பொருண்மலிபாக்கத்து
வழங்கலானாப் பெருந்துறை” (அகம், 338 ; 19 20)