‘பீ’ என்னும் இடக்கர்ப்பெயர், நீ என்னும் முன்னிலைப் பெயர், மேலாயபண்பையும் மேலிடத்தையும் உணர்த்தும் மீ என்னும் சொல் – இவற்றின்முன்வருமொழி முதல் வன்கணம் வருமிடத்தே அல்வழிக்கண் இயல்புபுணர்ச்சியாம்.மீ இயல் பாகப் புணர்தலேயன்றி வலியும் மெலியும் மிக்குப் புணர்தலுமுண்டு.எ-டு : பீகுறிது, நீ குறியை, மீகண்; மீக்கூற்று,மீந்தோல்மீகண் என்பது கண்மீ என்பதன் இலக்கணப்போலி யாய் அல்வழி ஆயிற்று.மீக்கூற்று – மேலாய சொல் லாற் பிறந்த புகழ் எனப் பண்புத்தொகை அன்மொழி.மீந்தோல் – மேலாய தோல் எனப் பண்புத்தொகை.(நன். 178 சங்.)