பவத்திரி என்ற ஊர்ப்பெயர், சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ள து. அகப்பொருட்பற்றிய பாடல்களில் ஊர்ப்பெயர் இடம்பெறும் மரபையொட்டி, தலைவியின் நலம் பாராட்டும் காலை பவகத்திரி போன்ற நலமுடையாள் எனக் கூறப்படும் நிலையில் பவத்திரி என்ற ஊர்ப்பெயர் இடம் பெற்றுள்ளது. பவ்வம் கடல்; தரம் நிலம். (தரம்சிட்டா நிலங்களின் விலை அல்லது உத்தேசமதிப்பு; தரம் தீர்வை நிலவகைக் கேற்ப விதிக்கப்பட்ட தீர்வை) தரி நன் செய் நிலம். திரம் நிலம் மேற்காணும் சொற்களின் பொருளை ஆராயும்பொழுது கடலையொட்டி, அமைந்த பவத்திரி என்னும் ஊர், கடலை யொட்டிய நிலப் பகுதியூர் அல்லது கடலையொரட்டி. நன்செய் நிலங்கள் அமைந்த ஊர் என்ற பொருளில் பவ்வத்தரம் அல்லது பவ்வத்தரி என்று பெயர் தோன்றி நாளடைவில் பவ்வத்திறி என்று ஆகி பவத்திரி எனவோ, அல்லது பவ்வத்திரம் என முதலில் பெயர் பெற்று நாளடைவில் பவ்வத்திரி என்று ஆக பவத்திரி என நிலைத்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நெல்லூர் மாவட்டத்துக் கூடர் வட்டத்து : ரெட்டிப்பாளையமே சங்க காலப் பவத்திரியாகும். திரையர். எனப் பெற்ற தொண்டையர்கள் ஆண்ட நாட்டில் பவத்திரி என்பது சிறந்த நகரமாகத் திகழ்ந்தது என்பது இலக்கியம் தரும் செய்தி, பவத்திரி என்ற ஊர்ப்பெயர் அவ்வூரை உள்ளட.க்கியிருந்த ஒரு கோட்டத்தின் பெயராகவும் இருந்திருக்கிறது. சிறந்த நகரமாகத் திகழ்ந்த பவத்திரி இன்று தன் நலம் இழந்து, பெயர் இழந்து வேற்றுப் பெயரில் ஒரு சிற்றூராய் உள்ளது.
“பவத்திரிக் கோட்டத்துப் பேரூர் நாட்டுப் பண்டரங்கம் உடைய நாயனார்”
“கடல் கொண்ட பவ்வத்திரி கோட்டத்துக் காகந்து நகரில் பண்டரங்கீசுவரம்“
“இராஜேந்திர சோழ மண்டலத்துப் பவ்வத்திரி”” ஆகியவை கல்வெட்டுத் தொடர்கள். முதல் கல்வெட்டில் கடலுக்கு இரையாகாதிருந்த பவ்வத்திரி கோட்டம், அடுத்த கல்வெட்டுக் காலத்தில் கடலுக்கு இரையானமை தெதறிகிறது. எனவே அக்கோட்டம் கடலை அடுத்து இருந்தமை தெளிவு. நெல்லுரர் மாவட்டத்துக் கூடூர் வட்டத்தில் கடலுக்கருகில் “ரெட்டி பாளையம்’” என்னும் சிற்றூர் உள்ளது. அதனைச் சேர்ந்து “பண்டரங்கம்” என்னும் மிகச் சிறிய ஊர் உள்ளது. அங்குள்ள சிவன் கோயில் கல்வெட்டுகளே மேற்கூறப்பட்டவை. இக் கல்வெட்டுத் தொடர்களை ஆதாரம் காட்டி “பவத்திரி” என்ற சங்க கால ஊர்ப்பெயர் தான் “பவ்வத்திரி” என மாறியிருக்க வேண்டும் என்பர். பவ்வத்திரி என்றே தோற்றத்தில் பெயர் பெற்ற நகரம் சங்ககாலத்தில் “பவத்திரி ஆகி, பிற்காலத்தில் கல்வெட்டில் “பவ்வத்திரி” எனக் கூறப்பெற்றிருக்கலாம் என்றும் எண்ணலாம். ‘பவத்திரி’ தொண்டையர் ஆட்சியில் இருந்ததாக சங்க இலக்கியம் கூறுவதால், தொண்டை மண்டலம் நெல்லூர் வரை அக்காலத்திலேயே பரவியிருந்தது எனக் தெரிகிறது. 25 2 1976 ஆம் தேதிய இனமணிச் சுடரில் வந்த “ப்ரளய காவேரி” என்ற கட்டுரையில் பழவேற்காடே “பவத்திரி” என்றும் காகந்தி என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறிய செவிவழிச் செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை வரலாறு, இலக்கிய அடிப்படையற்றவையாகும். சாதவாகனர்களுக்குப் பின்னர் வந்த மூன்றாம் நூற்றாண்டு இக்குவாகு வம்ச அரசர்களின் அமராவதிக்கல்வெட்டில் பவத்தரி என்பது “சிறிபவத்தே” என்று பிராகிருத மொழியின் மரபால் அழைக்கப்பட்டதைக் காணலாம். “அகநானூறு ‘பவத்திரி’ என்று அழைப்பது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு மேற்பட்ட மரபாகும், “சிரிபர்வத்” என்ற வட மொழிப்பெயர் “சரிபவ” என்று பிராகிருதமொழியில் மாறிற்று, இந்த மரபைப் பின்பற்றியே அகநானூற்றில் “பர்வத்” என்ற வடமொழிப் பெயர் ‘பவ’ என்று மாறியது என்று கொள்ளலாம். அல்லது பிராகிருதப் பெயரை அப்படியே அகநானூறு எடுத்துக் கூறியது என்று கருதுவதும் பொருத்தமானதாகும். “பர்வதகிரியின் ஓட்டுச் சொல்லான “ரி” தமிழில் திரிந்து திரியாக மாறி “பவத்திரி” என்ற பெயர் தோன்றியது. “மூன்றாம் நூற்றாண்டில் இக்குவாகு வம்சத் இனரின் அமரரவதிக் கல்வெட்டில் சிரிபவத்த’, விஜயபுரி புவதெசா” என்று சொல்லப்பட்டிருப்பதால் *சிரிபவத்தே’ என்ற பெயரே “பவத்திரி” என்று அகநானூற்றில் தெளிவாகத் தெரிஒறது. “ஆதலின் பவத்திரி” என்று வரும் அகநானூற்று ஊர்ப் பெயர் ஸ்ரீபர்வதம், பர்வதஸ்ரீ என்ற பெயரே என்பதில் ஐயமில்லை. என்ற கருத்துப்பொருத்தமானதாக தோன்றவில்லை. அகநானூற்றின் காலத்தை வைத்து ஆய்ந்தால் இது பொருந்துமா என்பது ஐயமே. சங்ககாலப் பாடலில் இடம் பெற்ற ஓர் ஊர்ப்பெயர், அக்காலத்திற்கு முன்னரே தோற்றம் பெற்று சிறப்புற்றிருந்த ஊரின் பெயரல்லவா?
“செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன்
பல்பூங்கானற் பவத்திரியன இவள்
நல்லெழில் இளநலந் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே“ (அகம் 340:6 9)