பழைய

பழைய1 paḻaiya, வி.எ. (adj.)

   நாட்பட்ட; old.

     “பழைய வடியார்க்கு” (திருவாச. 5, 89.);

க. பழய

     ‘புதியமொந்தையில் பழைய கள்’ (பழ.);

     ‘பழைய குருடி கதவைத் திறடி’ (பழ.);

 பழைய2 paḻaiya,    பெ.அ (காலத்தால்) முந்திய;முன்பு இருந்த ; old (in time);old (by use.)

     “பழைய வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது”

     “பழைய பயன்படாத பொருள்களை எல்லாம் பொங்கலின் போது கழித்து விடுவது தமிழ்மக்கள் வழக்கம்”