பழையாறை

பழையாறை என்று இன்றும் சுட்டப்படும் தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. திருநாவுக்கரசர் பாடல் பெற்ற கோயில்களையுடையது. பழையாறையில் உள்ளதே வடதளி தவிர சத்தி முற்றம், பட்டீச்சரம் ஆகிய கோயில்களும் இங்கு உள்ளன. எனவே சத்திமுற்றம், பழையாறை வடதளி, பட்டீச் சரம் என்பன இன்று ஊர்ப்பெயர் போன்று தோன்றினும், பழையாறையின் பகுதிகள் கோயில் காரணமாகப் பெயர் பெற்ற நிலையையே இவண் காண்கின்றோம். பழையாறை என்ற ஊர் பற்றிய ஆய்வு சில எண்ணங்களைத் தருகிறது. பழைய ஆறை பழையாறை என்று ஆயிற்றா? அல்லது இப்பெயருக்கு வேறு காரணங்கள் உண்டா ? எனக் காண, சில எண்ணங்கள் தோன்றுகின்றன. சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் நகரங்களில் இது ஒன்று எனச் சுட்டப்படுகிறது. எனினும் சங்க இலக்கியக் குறிப்புகள் ஒன்றும் இவ்வூர் பற்றிச் சுட்டவில்லை : எனவே இடைக்கால சோழர்கள் காலத்தில் தோன்றிய அல்லது முக்கியத்துவம் பெற்ற ஊராக இது இருக்க வாய்ப்பு அமைகிறது. இந்நிலையில் பழைய ஆறை என்பது பொருந்துமா ? என்பது எண்ணத்தக்கது. 1. The Cholas. it seems ruled as petty princes from Palaiyarai which is near Tanjavur. – History of Tamil Nadu – pa- 175 அடுத்து ஆறை என்பது மரூஉ என்பதும் ஆற்றூர் அதன் விரி என்பதும் அறிஞர் ஒருவர் கருத்தாக அமைகிறது. மேலும், இந்த அறிஞரே, பழையாறு என்ற ஆற்றுப் பெயர் பழைமை காரணமாக அதாவது ஆற்றின் காலப் பழமை காரணமாக ஏற்பட்ட பெயர் என்று கருதுகின்றார். எனவே பழையாறை என்பதை நோக்க, பழையாற்றூர் என்பதன் மரூஉவாக இருக்குமா எனப் பார்க்கலாம். இதற்கும் பண்டைச் சான்றுகள் இல்லை. பழையாறையில் பழையாறு ஓடியதாகத் தெரியவில்லை. இன்றும் இல்லை. திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில்,
அலையினார் பொழில் ஆறை வடதளி (172- 1)
அள்ளலம் புனல் ஆறை வடதளி (172-5)
பாயிரும் புனலாறை வடதளி (172-9)
என்று சொல்லும்போது, புனல் வளம் காட்டும் நிலை அமையினும் பழையாறு என்ற நதிப்பெயர் அங்குக் குறிப்பிடப்பெற வில்லை. எனவே பெயர் சுட்டப்படாது, பழைமையாக உள்ள ஈற்று ஊர் என்ற நிலையில் ஊர்ப்பெயர் குறிப்பிடப் பெற்றதோ எனத் தோன்றுகிறது. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் கருத்தும் இவண் சுட்டத்தக்கது. சோழமன்னர்களின் சிறந்த தலைநகரங்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் என்பதை அறிவோம். அவற்றை ஒத்த பெருமையுடையது பழையாறை. காவிரியின் கிளை நதியான முடிகொண்டான், அரிசிலாறு இவற்றுக்கிடையே ஐந்து மைல் நீளமும் மூன்று மைல் அகலமும் உள்ள பிரதேசமே பழை யாறைப் பகுதி (காவிரிக்கரையிலே – பக்-38). மேலும் கி பி 7 ஆம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையில் இந்நகர், நந்திபுரம், முடி கொண்ட சோழபுரம், இராசராசபுரம் என்ற பிற பெயர்களையும் கொண்டு வழங்கி வந்துள்ளது எனத் தெரிகிறது. நம்பியாண்டார் திருத்தொண்டர்த் தொகையும் இதனை, மிண்டும் பொழில் பழையாறை (7) எனவே சுட்டுகிறது. சேக்கிழார் இதனை,
செறிவரை நன் மலர்ச்சோலை பழையாறு’ (திருஞா-192)
என்றும்,
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை (13-1)
என்றும்,
செய்ய சடையார் பழையாறை (27-294)
என்றும் குறிப்பிடும் நிலையில் சேக்கிழார் காலத்தில், சோழர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாகவும், இங்குள்ள பல கோயில்கள் காரணமாகவும் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தது என்பதை மட்டுமேயுணர இயலுகிறது. எனவே பழையாறையின் பெயர் ஆறு காரணமாக அமைந் திருக்க வாய்ப்புமிகுகிறது. கூட இதனை, ஆறை என்றும், பழைசை என்றும் குறைத்தும் சுட்டினர் என்பதையும் தேவாரப் பாடல்கள் காட்டுகின்றன. இந்நிலையில் சங்ககாலத்தில் சுட்டப்படாத நிலையையும். இம் மரூஉக்களையும் நோக்க, பழையாறையின் மரூஉவே பழசை என்ற கருத்து நோக்க, ஆற்றூர் ஆறையாகி ஆறை யே பழைய அடை இணைப்பில் பழையாறை என்று ஆயிற்றோ என்றும் தோன்றுகிறது. அரசியல் காரணமாக பழையாறை பின்னர் தொடர்பு ஆயிரத்தளி. முடிகொண்ட சோழபுரம் என்ற பெயர்களைப் பெற்றது எனினும் இன்று வரை பழையாறையே செல்வாக்குடன் திகழ்கிறது. பழையாறை வடதளி சிவன் கோயில் அப்பர் பாடல் பெற்று அமைய, இங்குள்ள பட்டீச்சரம் கோயிலைப் பாடுகின் றார் சம்பந்தர். காமதேனுவின் பெண்கள் நால்வருள் பட்டி’ என்பவள் வருபட்ட தலம் என்பது புராணக் கருத்து பழை யாறையுள் அள்ள பிற கோயில்கள் சிவன் கோயில்களாக அமைய, சக்திக்கென்று எழுந்த கோயிலாக இது முதலில் அமைந்திருக்க லாம் எனத் தோன்றுகிறது. திருநாவுக்கரசர் பதிகம் திருச்சத்தி முற்றத்துறையும் சிவக் கொழுந்தே என்று அமைகிறதே தவிர பெயர் பற்றிய விளக்கம் எதையும் சுட்ட வில்லை. சத்தி இறைவனுக்கு முத்தம் கொடுத்தால் சத்தி முற்றம் ஆயிற்று என்ற எண்ணமுண்டு.. எனினும் சத்தி முற்றம் முதலில் அமையும் தன்மை இப்பெயருக்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என்பதை யுணர்த்துகிறது. சக்தி கோயிவிருந்த இடமாக இருக்கலாம் என்பது உறுதிப்படுகிறது. இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டுச் சான்றுகளும், இத்தலத்திற்கு அமைகின்றன. சோழ, நாயக்கர் காலத்தைச் சார்ந்தன அவை, இக்கல்வெட்டுகளில் இறைவர் திருச்சத்தி முற்றம் உடையார், திருச்சத்திவனப் பெருமாள் என்னும் திருப் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளார் எனக் காண்கின்றோம் சத்தி என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் வேம்பு, கொம்மட்டி பேய்ப்புடல் போன்ற பல தாவரங்களைப் பொருளாகத் தருகிறது எனவே இக்காவரங்களுள் ஒன்றை முற்றத்தில் உடைய கோயில், (முற்றம் – வீட்டின் முன்னிடம்) ஊரின் வெளியிடம், பரப்பு – தமிழ் லெக்ஸிசன் – IV பக் -1249) என்ற பொருவில் அல்லது. சத்தி என்னும் தாவரம் நிறை வளப்பகுதி என்ற பெயரில் இவ்வூர்ப் பெயர் அமைந்திருக்கலாம். தவிர, இது நறையூர் நாட்டுட்பட்ட ஊர் என்பதும் திருச்சத்தி முற் கோயில் ராசராசபுரத்தில் இருப்பதாகச் சுட்டும் நிலையும் ” நறையூர் இராசராசபுரம் என்ற பெயர் இருந்ததோ என்ற எண்ணத்தைத் தரு எறது. தி.லை. சதாகிவப்பண்டரத்தார் பழையாடைறயில் உள்ள ஒரு கோயில் இது என்கின்றார். இன்று ஊர்ப்பெயராகத் திகழ்கிறது.