பழு2 paḻu, பெ. (n.)
பழுப்பு பார்க்க1. see paluppu.
“விழுக்கோட்பலவின் பழுப்பயம்” (அகநா.12.);
பழு3 paḻu, பெ. (n.)
1. விலாவெலும்பு; rib.
“யானையின் பழுப்போல்” (சீவக.1561.);
2. விலா; side of the body.
‘முடக்கிய விருகை பழுப்புடையொற்றி’ (திவா.);.
3. ஏணியின் படிச்சட்டம்; round of a ladder.
“ஒரு பழு ஏறப்பெற்றது” (ஈடு, 10,6,5.);.
4. சட்டம்; frame.
“தொட்டிற்பழுவைப் பிடித்துக்கொண்டு” (ஈடு,5,10,6);
5. பேய்; devil
“பழுவும் பந்தளும்” (குறிஞ்சிப்.259.);.
[படு → படி. படு → பழு]
பழு paḻu, பெ.(n.)
ஆலமரம்; banyan tree.stm
பழுவூர் ஆலந்துறை.
[பல்(பெரிய);-பழு]