பழுவூர்

பழுவூர் paḻuvūr, பெ. (n.)

   திருச்சி மாவட்டப் பாடல்பெற்ற சிற்றூர்; a village in Trichi dt.

     “குரக்கினம் விரைப்பொழிலின் மீது கனியுண்டு பரக்குறு புனற் செய் விளையாடு பழுவூர் திருஞானசம்பந்தர்-170-8.

     “மண்ணின் மிசையாடி மலையாளர் தொழுதேத்தி பண்ணினொலி கொண்டு பயில்கின்ற பழுவூர்” (-4);

என ஞானசம்பந்தர் பாடல்கள் பழுவூர் பற்றிய எண்ணம் தருகின்றன. பழுமரம் என்பது ஆலமரத்தை குறிக்கும் நிலையில் ஆலங்காடு, ஆலந்துர் போன்று

     ‘பழுவூர்’ என்ற ஊர்ப்பெயர் அமைந்திருத்தல் தெளிவு.