திருப்பழுவூர் என்ற பெயருடன், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊர் இது. கீழைப்பழுவூர் என்பதும் உண்டு
குரக்கினம் விரைப்பொழிலின் மீது கனியுண்டு
பரக்குறு புனற் செய் விளையாடு பழுவூர் (திருஞான-170-8)
மண்ணின் மிசையாடி மலையாளர் தொழுதேத்தி
பண்ணினொலி கொண்டு பயில்கின்ற பழுவூர் (- 4)
என ஞானசம்பந்தர் பாடல்கள் பழுவூர் பற்றிய எண்ணம் தருகின்றன, என்பது ஆலமரத்தைக் குறிக்கும் நிலையில் ஆலங்காடு, ஆலந்தூர் போன்று பழுவூர் என்ற ஊர்ப்பெயர் அமைந்திருத்தல் தெளிவு.