பழுப்பு1 paḻuppu, பெ. (n.)
1. பொன்னிறம்; ripeness; yellowness of fruits;
change of colour, natural colour of gold.
2. அரிதாரம்; yellow orpiment.
“பந்தியாப் பழுப்பு நாறில்” (சீவக.1287.);
3. முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை; leaf burned yellow with age
4. சிவப்பு; pink, reddish colour: light pink, as of cloth.
“அதரத்திற் பழுப்புத்தோற்ற” (ஈடு,5,3,3.);
5. சீழ்; pus.
“புண்ணிலுள்ள பழுபபை யெடுத்துவிடவேண்டும்”
[பழு → பழுப்பு]
பழுப்பு2 paḻuppu, பெ. (n.)
பழு பார்க்க;see {palu}
“பழுப்பேணி” (கந்தபு. வள்ளியம்.50.);
[பழு3 → பழுப்பு]