பழுதை paḻudai, பெ. (n.)
1. வைக்கோற்புரி; thick twist of straw, used as a rope.
“பழுதை யெடுத் தோடி வந்தான் பார்” (தனிப்பா.54,105.);
2. கயிறு;(பிங்.);; rope.
3. பாம்பு; snake, as resembling straw. (இ.வ.);
‘பழுதை என்று கிடக்கப்படவுமில்லை;
பாம்பு என்று நினைக்கப்படவுமில்லை” (பழ.);
‘பழுதை என்று மிதிக்கவும் முடியவில்லை; பாம்பென்று தாண்டவும் முடியவில்லை’ (பழ.);
[வல் → பல் → பலு → பழு → பழுதை]
பழுதை paḻudai, பெ. (n.)
வளர்ச்சியிற்ற கத்தலை மீன் (குமரி.மீன.);
matured kattalai fish.