பழுது

பழுது paḻudu, பெ. (n.)

   1. பயனின்மை (தொல்.சொல்.324.);; unprofitableness.

   2. குற்றம் (திவா.);; defect, blemish, flaw, fault.

     “பழுதிறொல் புகழாள் பங்க” (திருவாச.28,10.);

   3. சிதைவு; damage, injury, ruin.

     “இவை பழுதிலை” (தேவா.543,2.);

   4. பதனழிந்தது; anything tainted rotten, putrid, marred.

   5. பிணமாயிருக்குந்தன்மை (சிலப்.19;66.);;  the state of being a corpse.

   6. பொய் (பிங்.);; lie.

     “பழுதுரையாதவனுரைப்பான்” (திருவாலவா. 39,9.);

   7. வறுமை; powerty.

     “பழுதின்று” (பொருந.150.);

   8. தீங்கு; evil.

     “பழுதெண்ணு மந்திரியின்” (குறள்,639.);

   9. உடம்பு; body.

     “பழுதொழிந் தெழுந் திருந்தான்” (சிலப்.19,66.);

   10. ஒழுக்கக்கேடு; moral evil, turpitude.

   11. இடம். (அக.நி.);; place.

   12. நிறைவு; fullness.

     [பாழ் → பழுது]