பழுது-தல் paḻududal, 5. செ.கு.வி. (v.i.)
1. கனிதல்; to grow ripe, become mellow.
2. முதிர்தல்; to mature.
“வண்டுபடப் பழுநிய
தேனர் தோற்றத்துப் பூவும்” (மதுரைக்.475.);
3. முற்றுப் பெறுதல்; to be full or perfect.
“வளம் பழுநி” (மலைபடு,578.);
[பழு → பழுது-.]