பழி1 paḻittal, 11. செ.குன்றா.வி. (v.t.)
1. இகழ்தல்; to blame. censure, ridicule, revile.
“உலகம் பழித்தது” (குறள். 290.);
2. புறங்கூறுதல்; to slander, caluminate. (இ.வ.);
“இப்படி யொரு செயலைச் செய்து விட்டு வந்து நிற்கும் உன்னைப் பழிக்காமல் பாராட்டவா செய்வார்கள்”.
பழி1 paḻi, பெ. (n.)
1. இகழ்ச்சி; blame, censure, reproach, ridicule.
“புகழிற் பழியி னென்றா” (தொல். சொல். 73.);
2. அலர்; slander, calumny.
“ஒன்றார் கூறுமுறுபழி நாணி” (பு.வெ. 11, வெண்பாற். 4.);
3. குறை; complaint, imputation charge, disparagement. (w.);
4. குற்றம்; fault, crime.
“பொழிபல பெருகிய பழிநீர் தேஎத்து” (பட்டினப். 26.);
5. கரிசு; sin guilt.
“தசமா முகன் பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோயற” (தேவா. 890, 2.);
6. பழிதீர்த்தல்; revenge, vengeance, vindictiveness. (W.);
7. பொய்; falsehood, deceit.
8. பகை; discord.
9. ஒன்றுக்கும் உதவாதவன்; worthless fellow. (கொ.வ.);
‘பழி ஓரிடம் பளகு ஓரிடம்’
‘பழிக்கு அஞ்சாதவன் கொலைக்கு அஞ்சுவானா?’ (பழ.);
பழி2 paḻi, பெ. (n.)
கடும் குற்றம்; பெறுந்தவறு; charge;
accusation.
“உன்னைப் பட்டினி போட்டேன் என்ற பழி எனக்கு வேண்டாம்”
பழி3 paḻi, பெ. (n.)
1. குற்றம்; crime. (பிங்கல. 186.);.
2. தீவினை; “ஒருவற்கு பால தோரும் பழி” (திருக்.40.);
3. பழிப்பு; scorn, contempt.
“பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறை யாய்நின்றார்” (கந்தபு. பததீசியத். 118.);