பழிச்சு1 paḻiccudal, 5. செ.குன்றாவி. (v.t.)
1. புகழ்தல்; to praise, extol, eulogise.
“விறலியர் கை தொழுஉப் பழிச்சி” (மதுரைக். 694.);
2. வணங்குதல்; to adore, worship.
“கைவல் விளையர் கடவுட்பழிச்ச” (பதிற்றுப். 41, 6.);
3. வாழ்த்துதல்; to bless.
“பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள” (தொல்.உரி.84.);
“நிற்பழிச்சிச் சேறும்” (புறநா. 113.);
4. கூறுதல்; to announce, tell.
“பொருளினிப் பழிச்சுகின்றதே” (சீவக. 3041.);
[வழுத்து→ பழிச்சு → பழிச்சு-,]
பழிச்சு2 paḻiccu, பெ. (n.)
போற்று (தொல். சொல். 382.);; praise, adoration.
[வழித்து → பழிச்சுதல் → பழிச்சு]