பழிகட்டு1 paḻigaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.)
1. சண்டை தொடுத்தல்; to pick a quarrel.
2. அடாத குற்றஞ் சாட்டுதல்; to bring an injust accusation.
3. பகைமூட்டுதல்; to sow discord.
4. குற்றஞ்செய்தல்; to commit a Crime.
[பழி + கட்டு-,]
பழிகட்டு2 paḻigaṭṭudal, 5. செ.குன்றா.வி. (v.t.)
அச்சுறுத்தல்; to threaten in order to effect one’s purpose.
[பழி + கட் டு-,]