பழம்

பழம்1 paḻm, பெ. (n.)

   1. கனி; fruit, ripe fruit.

     “காயே பழமே” (தொல். பொ. 643.);.

     “பழச்சுமையினானை” (திருவாச.திருப்போற்.15.);

   2. அகவை முதிர்ந்தேன்; very aged person.

   3. நற்பயன்; fruitfulness, success.

   4. ஆட்டக்கெலிப்பு; winning points, as in a game of tick-tack.

   5. முக்கால்; three quarters.

ஆறுதற்பழம், இணங்கற்பழம்

 cant.

     [பழு → பழம்]

     ‘பழம் பழுத்தால் கொம்பில் தங்காது’ (பழ.);

     ‘பழத்திலே பழம் மிளகாய்ப் பழம்’ (பழ.);

     ‘பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல’ (பழ.);

     ‘பழம்புண்ணாளி பாதி மருத்துவன்’ (பழ.);

   மறுவ;பலம், கனி, பழம்.

 பழம்2 paḻm, பெ. அ (adj.)

   முந்திய;   கடந்தகால;   பழைய; ancient;

 old: olden (days);

     “சோழர் காலத்துப் பழங்காசுகள் கிடைத்தன”

     “பழங்காலத்துக் கதைகள்”