பழமை

பழமை paḻmai, பெ. (n.)

   1. தொன்மை; oldness, ancientnes, antiquity.

     ‘பழமையாக சிற்பங்கள் அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்குள்ளன.

   2. தொன்மையானது; that which is ancient, as a place;

 that which is antiquated or old fashioned.

     “பரமர் பழமை யெனலாம்……. மயிலாடுதுறை” (தேவா. 496, 5.);

   3. வழங்காதொழிந்தது; what is obsolete (w.);

   4. சாரமின்மை; Staleness, vapidness, insipidity.

   5. முதுமொழி (சூடா.);; old saying, proverb.

   6. நெடுநாட்பழக்கம்; long established intimacy.

   7. நாட்பட்டதால் ஏற்படுஞ்சிதைவு; decay from age.

   8. பழங் கதை; ancient history; chronicle.

   9. மரபு; long established usage or custom. (w.);

     [பழைமை → பழமை]