இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இலுப்பைப்பட்டு என்ற பெயரில் வழங்கி வருமிடம். சுந்தரர் இத்தலம் பாடுகின்றார். எனினும் இறைப் புகழ் சுட்டப்படுகிறதே தவிர ஊர்ப்பெயர் விளக்கம் எதுவுமில்லை.
விடுத்தவன் கைநரம்பால் வேத கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால் வெண்ணீற்றன்பழ மண்ணிப்படிக் கரையே -22-7
மண்ணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்றதொரு தலம் இருப்பதைக் காண்கின்றோம். எனவே இவ்விடமும் மண்ணியா பின் கரையில் அமைந்து இருப்பதனால் முதலில் மண்ணிப்படிக்கரை எனப்பெயர் பெற்றதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. பின்னர் இலும்பை மரங்கள் மிகுதியாக இருந்ததால் இலுப்பைப் பட்டு எனச் சுட்டப்பட்டு இருக்கலாம்.