பழனம்

பழனம்1 paḻṉam, பெ. (n.)

   1. வயல்;{paddy} field.

     “பழன மஞ்ஞை யுகுத்த பீலி” (புறநா. 13.);

   2. மருதநிலம்; agricultural land.

     “பன்மலர்ப் பழனத்த” (கலித். 78.);

   3. பொய்கை; tank

     “பழன வாளைப் பரூஉக்கட்டுணியல்” (புறநா. 61.);

     [பழம் → பழன் → பழனம்]

 பழனம்2 paḻṉam, பெ. (n.)

   தஞ்சைமாவட்டச் சிற்றூர்; a village in Tanjore Dt.

இரண்டு கல் தொலைவில் உள்ளது. சிவனடியார்கள் மிகவும் விரும்பும் தலம் இது என்பதைப் பலரின் பாடல்களும் உணர்த்துகின்றன.

சிவபெருமான் திருவிரட்டை மணிமாலையில் அதன் ஆசிரியர்,

     “குருகினம் சென்றிடறும் கழனிப் பழனத் தரசை” (28); என்று போற்றுகின்றார்.

     “பாங்கார் பழனத்தழகா போற்றி என்கின்றார். மாணிக்கவாசகர். (திருவாச.போற்றி.-157);

     “நனி மஞ்சுடைய நறுமாங்கனிகள் குதி கொண்டெதிருந்திப் பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழனநகராரே” – திருநாவு சம்பந்தர்-67-5.

     “பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான்” – திருநாவுக்கரசர்-149-1

     “வாளைபாய் புனற் பழனத் திருப்பழனம் மருங் கணைந்து” – (பெரியபு.-திருநாவுக்கரசர் – 199.);

இவை போன்ற பாடல்கள் பழனத்தின் வளத்தினைக் காட்டவல்லன.