பள், கள் என்பன ‘புள்’ என்ற பொருட்பெயர் போல இரு வழியும் உகரச்சாரியையும் பெற்றுப் புணரும். இருவழியும் ளகரம் டகரமாய்த் திரிந்துமுடிதலும் ஆம்.வருமாறு : பள்ளுக்கடிது, பள்ளுக்கடுமை; பட்கடிது, பட் கடுமை;கள்ளுக்கடிது, கள்ளுக்கடுமை; கட் கடிது, கட்கடுமை, (404 இள.உரை.)