பல, சில – என அகர ஈற்றனவாக வைத்துப் புணர்த்த காரணம் யாதெனில்,அப்பண்புகள் பன்மை சின்மை – எனப் பகுதிப் பொருள் விகுதி (மை)யோடேனும், பலர் – பல, சிலர் – சில – என விகுதிப் பொருள்விகுதியோடேனும் (அர், அ) அன்றித் தனித்துநில்லா ஒற்றுமை நயம் பற்றிஎன்பது. (நன். 170 சங்கர.)