பல : சொல்லிலக்கணம்

பல என்னும் சொல் பெயரெச்சக் குறிப்பாயும் ( பல குதிரைகள் ஓடின), குறிப்பு வினைமுற்றாயும் (குதிரைகள் பல ), குறிப்பு முற்று ஈரெச்சம் ஆகும் பெயரெச்சக் குறிப்பாயும்வினை யெச்சக் குறிப்பாயும் [ (பல குதிரைகள் ஓடின (பலவாகிய), குதிரைகள், பல ஓடின(பலவாய்) ], குறிப்பு வினையாலணையும் அஃறிணைப் பன்மைப் பெயராயும் [ பல ஓடின (பலவாகிய குதிரைகள்) ], பொருளாதி ஆறனுள் பண்பு காரணமாக வரும் அஃறிணைப் பன்மைப்பெயராயும் (குதிரைகள் ஒன்றல்ல, பல) என அறுவகைப்பட்டுப் பொருள்நோக்கம்முதலியவற்றால் இன்னதென்று துணியப்படும். (நன். 167 சங்கர.)