பல, சில தம்முள் புணருமாறு

பல சில என்பன தம்மொடு தாம் புணரின் இயல்பும், வல்லினம் மிகுதலும்,நிலைமொழியீற்று அகரம் கெடுதலும், அந்த லகரமெய் றகரமெய் ஆதலும், ஏனையபெயர் வரு மொழியாக வருமிடத்து நிலைமொழியீற்று அகரம் விகற்ப மாதலும்,(லகரமெய் றகரமாகச் சிறுபான்மை திரிதலும்) உள.வருமாறு : பலபல, பலப்பல, பல்பல, பற்பலசிலசில, சிலச்சில, சில்சில, சிற்சிலபலபொருள், பல்பொருள்; சிலபொருள், சில் பொருள்; பற்பகல், சிற்கலை(நன். 170)