பல என்பது தன்முன் பிறபெயர் வரின், லகரம் றகர ஒற்றாகாது, அகரம்கெட்டுப் புணரும்.எ-டு : பல்கடல், சேனை, தானை, பறை, யானை, வேள்வி எனவரும்.உயிர் வருவழித் தனிக்குறில் முன் ஒற்று இரட்டிப் பல்லணி,பல்லாண்டு, பல்லிலை என்றாற்போல வரும்.‘பல்வேறு கவர்பொருள்’ (தொ. பொ. 114 நச்.)‘எண்ணரும் பன்னகை’ (114 நச்.)‘பல்லாற்றானும்’ (168 நச்.)‘பல்குறிப்பினவே’ (286 பேரா.)‘பன்முறையானும்’ (தொ . சொ. 396 நச்.)(தொ. எ. 214 நச்.)