பல்வகைப் பெயரின் எச்சம் முன் வலிஇயல்பாதல்

எ-டு : உண்ட, உண்ணாநின்ற + குதிரை, செந்நாய், தகர், பன்றி எனத்தொழில்கொள் பெயரெச்சம் முன் இயல்பாயின.பொன்னன்ன, பொன்போன்ற, பொன்னனைய, பொன்னி- கர்த்த, பொன்னொத்த +குதிரை, செந்நாய், தகர், பன்றி என உவமைப்பண்பு கொள் பெயரெச்சம் முன்இயல்பாயின.பெரிய, சிறிய, செய்ய, இனிய, தண்ணிய + கமலம் – சரோருகம் – தாமரை -பங்கயம் எனப் பலவகைப் பண்புகொள் பெய ரெச்சம் முன் இயல்பாயின.உண்ணாத, தின்னாத + குதிரை, செந்நாய், தகர், பன்றி எனப் பெயரெச்சஎதிர்மறை முன் இயல்பாயின. (நன். 166 மயிலை.)